புழல் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
புழல் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
செங்குன்றம்,
சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் அருகே நேற்று மதியம் லாரி ஒன்று திடீரென பழுதடைந்து நின்றது. அப்போது போக்குவரத்து போலீசார் சாப்பிட சென்று விட்டதால் எந்த சிக்னலிலும் போலீசார் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாதவரம் மேம்பாலம் முதல் புழல் காவாங்கரை வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களே நீண்ட நேரம் போராடி போக்குவரத்தை சீர் செய்தனர்.