மாநில அளவிலான தடகளப்போட்டிகளில் கே.எஸ்.வி பள்ளி பதக்கங்கள்
							
								
								
								
									
									உள்லூர் விளையாட்டு, 
									
								
								2242	
							
							
						
							
						
						
							மாநில அளவிலான தடகளப்போட்டிகளில் கே.எஸ்.வி பள்ளி பதக்கங்கள் 
       2015-2016ஆம் கல்வியாண்டின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோவை நேரு விளையாட்டு அரங்கில் டிசம்பர் 18.12.2015 முதல் 20.12.2015 வரை நடத்தப்பட்ட 58வது குடியரசு தின தடகளப் போட்டிகளில் தமிழகத்தின்               16 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 2327 வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்கள். இதில் கே.எஸ்.வி பள்ளி 10ஆம் வகுப்பு மாணவன்                       ளு. மணிராஜ் 17 வயதிற்குட்பட்ட மூத்தோர் பிரிவில் மும்முறைத் தாண்டுதலில் 14.35 மீட்டர் தூரம் தாண்டி பழைய சாதனை 14.01 மீட்டர் தூரத்தைத் தாண்டி முறியடித்துள்ளார். மேலும், இம்மாணவன் புதிய சாதனைப்படைத்து, வருகின்ற 2016 ஜனவரியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப்போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளார்.   மேலும், மாணவிகள் பிரிவில் 19 வயதிற்குட்பட்ட மிகமூத்தோர் பிரிவில் ளு. பேபி 400 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடம் 02 விநாடிகள் கடந்து மூன்றாமிடமும்,  மாணவிகள்  ழ. வினோதினி, ளு. கோமதி,  ளு. பேபி,    டு.சத்யபிரியா ஆகியோர்கள் குழு 4ஓ400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 4 நிமிடம் 15 விநாடிகள் கடந்து மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.  மேலும், இத்தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளையும்  பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள்              கூ. விஜேந்திரன் மற்றும் ஞ. ரம்யா ஆகியோர்களையும் பள்ளித் தலைவர்                  திரு ஞ. கனகராஜ் அவர்கள், செயலாளர்  திரு ஆ. ஜெயபிரகாஷ் அவர்கள்,  பொருளாளர் திரு ளு.முத்துச்சாமி அவர்கள், தாளாளர்  திரு ஞ. பெரியசாமி அவர்கள், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர்                           திரு மு.பத்மநாபன் அவர்கள்,  உடற்கல்வி இயக்குநர் திரு கூ. கதிர்வேல் அவர்கள், பள்ளியின் உதவித் தலைமையாசிரியர்,  ஆசிரிய - ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டிச்சிறப்பித்தனர். 
					