The Imperfect Show Survey: 12 கேள்விகள்... பல்லாயிர நேயர்கள் கலந்து கொண்ட சர்வே முடிவுகள்!
							
								
								
								
									
									தமிழ் உலகம், 
									
								
								534	
							
							
						
							
						
						
							The Imperfect Show Survey: 12 கேள்விகள்... பல்லாயிர நேயர்கள் கலந்து கொண்ட சர்வே முடிவுகள்!
`2024 லோக் சபா தேர்தலை' முன்னிறுத்தி `The Imperfect Show’ சார்பில் சர்வே நடத்தியிருந்தோம். அதன் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
The Imperfect Show நேயர்களுக்கு முதலில் நன்றி. ஐ.பி.எஸ் ஷோ நடத்திய சர்வேயில் 31,000 பேர் கலந்து கொண்டிருந்தீர்கள். அதுவும் அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் 80 சதவிகித நேயர்கள் வாக்களித்திருந்தீர்கள். அதிகபட்சமாக தென்சென்னை தொகுதியிலிருந்தும், கோவை தொகுதியிலிருந்தும் பெரும்பாலான நேயர்கள் வாக்களித்திருந்தீர்கள். உங்கள் பங்களிப்பு ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இந்த சர்வே The Imperfect Show நேயர்களுக்காக நடத்தப்பட்ட சர்வே. இந்த முடிவுகள் அப்படியே தேர்தல் முடிவுகளாக வந்தால், நீங்கள் மகிழ்ந்து கொள்ளலாம். நீங்கள் மக்கள் கருத்தோடு ஒத்துப்போனீர்கள் என்று, நம்மை நாமே கொண்டாடிக் கொள்ளலாம். நம் நேயர்கள் அரசியல் தெளிவு உடையவர்கள். ஒரு வேளை, இதற்கும் தேர்தல் முடிவுகளுக்கும் வேறுபாடு இருந்தால், நாம் இன்னும் களத்தைப் படிக்க வேண்டும் என்று பொருள். சுருக்கமாகச் சொன்னால் வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி...!
					