தமிழகத்தில் ஜன. 1 முதல் இந்து கோயில்களில் நுழையும்போது இப்படித்தான் ட்ரெஸ் போடனும்
							
								
								
								
									
									கோவில்கள், 
									
								
								1828	
							
							
						
							
						
						
							தமிழகத்தில் ஜன. 1 முதல் இந்து கோயில்களில் நுழையும்போது இப்படித்தான் ட்ரெஸ் போடனும் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி - அனைவரும் வரவேற்க்கக்கூடியது !
தமிழகத்தில் இந்து ஆலயங்களில் நுழையும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிரடி உடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது .
தமிழகத்தில் இந்து கோயில்களில் ஜனவரி 1-ந் தேதி முதல் ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, வழக்கமான பேன்ட் மற்றும் சட்டை அணிய வேண்டும்.
பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடை அணிந்து வரவேண்டும்.
இந்த ஆடை கட்டுப்பாட்டினை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும்.
அறநிலையத் துறைக்கு கட்டுப்படாத கோயில்களில் பாரம்பரிய ஆடை கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும். வேறு ஆடைகள் அணிந்து வரும் பக்தர்களை கோயில்களுக்குள் போலீஸார் அனுமதிக்கக் கூடாது.
					 
					