அணி தோற்றாலும் ஆறுதல் அளித்த ரோகித் சர்மாவின் சாதனைகள்
							
								
								
								
									
									வெளயுர் விளையாட்ட, 
									
								
								1394	
							
							
						
							
						
						
							அணி தோற்றாலும் ஆறுதல் அளித்த ரோகித் சர்மாவின் சாதனைகள்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு கிரிக்கெட் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலி்ல் பேட்டிங் செய்து 309 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரோகித் சர்மா. இவர் இன்றைய போட்டியில் 163 பந்தில் 13 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 171 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
பெர்த் மைதானத்தில் இதுவரை எந்த இந்திய வீரரும் சதம் அடித்தது கிடையாது. முதன்முறையாக ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் விவியன் ர்ச்சார்ட்ஸ் அவுட்டாகாமல் 153 ரன்கள் குவி்த்தார். இதை இன்று ரோகித் ஷர்மா முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கெதிராக விரைவாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றார். மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அவருடைய 3-வது சதம் இதுவாகும்.
இந்தியா இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், ரோகித் சர்மாவின் சாதனைகள் சற்று ஆறுதல் அளித்துள்ளது
					 
					