தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறு தானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மீ.தங்கவேவ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.02.2024) தொடங்கி வைத்தார்கள்.
							
								
								
								
									
									இயற்கை உணவு, 
									
								
								392	
							
							
						
							
						
						
							தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறு தானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மீ.தங்கவேவ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.02.2024) தொடங்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறு தானிய உணவகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலர்களுக்கும், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொது மக்களுக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட சிறு தானிய உணவுகள் விற்பனை செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் வரகரிசி காய்கறி பிரியாணி, கேழ்வரகு இட்லி, சாமை கிச்சடி, சாமை இடியாப்பம், சாமை காரப்பட்டு, தினை பொங்கல், குதிரைவாலி தயிர் சாதம், கம்பு முறுக்கு, சோழப் பணியாரம், காராமணி வடை, கொள்ளு வடை, கீரவடை, வாழைப்பூ வடை, முருங்கைக்கீரை சூப்பு போன்ற பல்வேறு உணவு தானியங்கள் மூலம் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம. கண்ணன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி. ஸ்ரீலேகா தமிழ் செல்வன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் திரு. சரவணன், தனித்துணை ஆட்சியர் திரு.சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.தண்டாயுதபாணி, உதவி திட்ட அலுவலர்கள் திரு.ராஜேஷ், திரு, சிந்து, திரு,அருண்குமார் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
					 
					