இனி “கிட்னி” கிடைக்காவிட்டால் கவலையில்லை… செயற்கை சிறுநீரகம் வந்து விட்டது!
							
								
								
								
									
									தொழில் ஆராயச்சி, 
									
								
								1629	
							
							
						
							
						
						
							இனி “கிட்னி” கிடைக்காவிட்டால் கவலையில்லை… செயற்கை சிறுநீரகம் வந்து விட்டது!
சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு காதில் தேன் வார்க்கும் செய்தியாக ‘செயற்கை சிறுநீரகத்தை’ உருவாக்கி, சிறுநீரகத் தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் விஞ்ஞானிகள். உறுப்பு மாற்று ஆபரேசனுக்கு உடல் பாகங்கள் தட்டுப்பாடு உள்ளதால் மனிதர்களின் சில உறுப்புகள் ஆய்வகத்தில் வைத்து விஞ்ஞானிகளால் செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. அந்தவகையில், செயற்கை சிறுநீரகங்கள் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக அமெரிக்க விஞ்ஞானிகள் செயற்கை சிறுநீரகங்களை உருவாக்கியுள்ளனர்.
சிலிக்கான் நேனோ பில்டர் மூலம் இந்த செயற்கை சிறுநீரகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள உப்பு, டாக்சின்ஸ், நீர் மற்றும் பிற சிறிய மூலக்கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் திறன் கொண்டுள்ளது.
இந்த புதிய சிறுநீரகத்தின் சிறப்பம்சம், அது செயல்பட தனியாக பம்ப் அல்லது மின் தேவை இல்லை என்பது தான். ரத்த அழுத்தத்தின் மூலமாகவே செயல்படுமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
டயாலிஸிஸ் செய்யப் பயன்படும் கருவிகளை விட நிச்சயமாக இந்த சிலிக்கான் சிறுநீரகம் சிறப்பாக செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
அறுவைச் சிகிச்சை மூலம் இந்த செயற்கை சிறுநீரகத்தை எளிதாக பொருத்த முடியும். என்பதோடு, இது இயல்பாகவும் செயல்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது செயற்கை சிறுநீரகம் என்பதை விட சிறுநீரகத்திற்கு மாற்று என்று கூறலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். டயாலிஸிஸ் செய்வதை விட இந்த செயற்கை சிறுநீரகத்தைப் பொறுத்திக் கொள்வது சாலச் சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை சிறுநீரகத்தின் மாதிரி செயல்படுத்தப்பட்டு பார்த்ததில் அது சிறப்பாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. அடுத்து கிளினிக்கல் ஆய்வுகள் தொடரவுள்ளன. அரசின் அனுமதி கிடைத்ததும் இது நோயாளிகளுக்குப் பொருத்துவது முறைப்படுத்தப்படும்.
					 
					